வீட்டிற்குள் போகவே கஷ்டப்படும் குடும்பம்.. குழிக்குள் இறங்கிய ஆசிரியர்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, கோயில் ஆர்ச் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி அரசு பள்ளி ஆசிரியர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில், சீனிவாச பெருமாள் கோயிலின் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயில் நுழைவு வாயில் அமைப்பதற்கு, அருகில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர் மணி வாசகத்தின் வீட்டின் முன் பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது. இதனால் மணி வாசகத்தின் குடும்பத்தினர் வெளியில் சென்று வருவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆத்திரமடைந்த மணிவாசகம், தன் சகோதரருடன் சேர்ந்து, கோயில் நுழைவு வாயில் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியில் அழைத்து வந்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்