பஸ்ஸை மறித்து போராட்டம்... திடீரென போர்மேன் சொன்ன வார்த்தையால் கொதித்த மக்கள் - பரபரப்பு காட்சி
காய்ந்து போன நெற்பயிரை வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது... திருப்பத்தூர் கத்தாரி பகுதியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சரியாக இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் அவ்வப்போது பழுதாகி விடும் நிலையில், சீர் செய்ய பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேதனையில் விவசாயிகள் நாட்றம்பள்ளி - குருபவானி குண்டா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரும், மின்சாரத் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அவ்வழியே வந்த போர்மேன் ரகுபதி என்பவர் அப்பகுதியில் ஒருமுனை மின்சாரத்தை துண்டிப்பதாகக் கூறியதால் மக்கள் ஆத்திரம் அடைந்த நிலையில் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Next Story