அம்மன் ஊர்வலத்தில் அசம்பாவிதம் -கொலையில் முடிந்த ஆட்டம்

x

திருப்பத்தூர் மாவட்டம் கோனமேடு அடுத்த வி.எஸ்.கே காலனி பகுதியில் அம்மன் கோயில் திருவிழாவின் போது, பூங்கரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது, கோணமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதி இளைஞர்களிடையே நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில், மேளம் அடிக்கும் இளைஞர் சந்துரு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சடலத்தை கொண்டு செல்ல முயன்ற போலிசாரை மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சந்துருவின் உறவினர்கள் கோணமேடு பகுதிக்கு சென்று அங்கிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை சூறையாடினர். இந்த சம்பவங்களை கண்டித்து இரு தரப்பினரும் இருவேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 2 கிராமங்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 150க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்