வலியோடு 7 கிமீ நடந்த முதியவர்.. மருந்து வாங்கிய அடுத்த நொடி பிரிந்த உயிர்! திருப்பத்தூரில் அதிர்ச்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி . 60 வயதான இவர், நெஞ்சு வலி காரணமாக மலைகிராமத்திலிருந்து, மலையடிவாரத்திற்கு சாலை வசதி இல்லாததால், 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார். பின்னர், கொத்தகோட்டை கிராமத்திலிருந்து பேருந்து மூலம் ஆலங்காயம் பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து,முனிசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை வசதியில்லாமல் போனதே, முதியவரின் இறப்புக்கு காரணம் என கிராமத்து மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது முதியவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்