"என் குழந்தை.." - வாசலில் அமர்ந்து தர்ணா செய்த பெண்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் கணவரின் உறவினர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு தரக்கோரி வீட்டு வாசலில் அமர்ந்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
என்பவர் 2019ஆம் ஆண்டு குருநாதன் சென்னையை சேர்ந்த பிரவீனா ன்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் இருவரும் வெளிநாடு செல்ல நேரிட்டது. விசா கிடைக்காததால், குழந்தையை குருநாதரின் உறவினரான சங்கர் கவிதாவிடம் ஒப்படைத்துள்ளனர். ஆறு மாதத்திற்கு பிறகு பிரவீனா நாடு திரும்பிய போது, குழந்தையை அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, கவிதா வீட்டு வாசலில் அமர்ந்து பிரவீனா தர்ணாவில் ஈடுபட்டார். குழந்தையை தனது கணவர் விற்றுவிட்டதாக கூறி இருவரும் மிரட்டுவதாக போலீசாரிடம் பிரவீனா முறையிட்டார்.
Next Story