4ஆம் வகுப்பு மாணவியால் மாறும் பள்ளி.. நடப்பட்ட முதல் கல்

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அரசு பள்ளி மாணவி ஒருவர் முதல்வருக்கு வைத்த கோரிக்கையால் புத்துயிர் பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம், சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி கட்டிடம் சேதமடைந்தும், போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்ததால் மாணவர்கள் சமுதாய நலக்கூடத்தில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நான்காம் வகுப்பு மாணவி இஷா என்பவர், பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டி தரக்கோரி, கடந்தாண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஒன்றிய பொது நிதியிலிருந்து 29 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டது. கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சிறுமி இஷா அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்று இப்பள்ளி உள்பட 300க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமையில் பலர் கலந்து இந்த விழாவில் கொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்