4 தலைமுறை வாழ்க்கையை மாற்றிய ஒற்றை காகிதம்.. கேள்விக்குறியான மாஞ்சோலை மக்களின் வாழ்க்கை..

x

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பகுதியை விட்டு செல்ல மனமில்லாமல் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்த மாஞ்சோலை மக்களின் துயரம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல..

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த மாஞ்சோலை எஸ்டேட், பாம்பே பர்மா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருந்தது.

இந்நிலையில் பாம்பே பர்மா நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2028ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடையும் நிலையில், அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒப்பந்தம் முடிவடைய 4 ஆண்டுகள் இருக்கும் நிலையிலும், கடந்த ஜூன் 14ம் தேதிக்குள் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுமாறு தேயிலை தோட்ட நிர்வாகம் கெடு கொடுத்தது.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதுடன் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது..

மாஞ்சோலை எஸ்டேட்டில் குறைவான சம்பளத்தில் நிறைவாக வாழ்ந்த நிலையில் தற்போது மாற்று இடத்திற்கு செல்லும் தங்களுக்கு வாழ்க்கையே கடினமாகி விட்டதாக புலம்புகின்றனர் மக்கள்


Next Story

மேலும் செய்திகள்