14 ஆண்டுகளுக்கு பின்.. களைகட்ட போகும் ஏர்வாடி.. நீதிமன்றம் அனுமதி

x

நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் 10 நாள் முகரம் திருவிழாவில் சந்தனக்கூடு மற்றும் குதிரை பஞ்ச ஊர்வலங்களின்போது, மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏர்வாடியில் நடைபெறும் சந்தனக் கூடு ஊர்வலத்தின்போது டிரம்ஸ் இசைத்துச் செல்ல கூடாது என்பது தவ்ஹீத் குழுவின் நிலைப்பாடாக உள்ளது.

இதனால், கடந்த 14 ஆண்டுகளாக திருவிழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு நடைபெறும் முகரம் திருவிழாவில், மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, ஏர்வாடியைச் சேர்ந்த தமீம் சிந்தா மதார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குழு மத ஊர்வலம் செல்வதைத் தடுக்க தவ்ஹீத் ஜமாத்துக்கு உரிமை இல்லை என்றும்,

இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவுகள் இந்த உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்குகிறது என்றும் கூறினார்.

ஒருவரின் அடிப்படை உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், அதை நிலைநாட்டுவதும், தலையிடுபவர்களை தடுப்பதும் மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்