உதவித்தொகை கேட்டு.. நடையாய் நடந்த 93 வயது மூதாட்டி ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்!

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வசிக்கும் 93 வயது மூதாட்டியான பேச்சியம்மாள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர் உதவி தொகை கேட்டு மனுக்களை கொடுத்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்ற மூதாட்டி, வெயிலின் தாக்கம் தாங்காமல் ஆட்சியர் அலுவலக நடைபாதையிலேயே அமர்ந்திருந்தார். அவருடன் வந்த நபர்கள் முதியோர் உதவித்தொகை விண்ணப்பத்தை, மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்க கூட்ட அரங்கில் வழங்கிவிட்டு வந்தனர். இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில், மூதாட்டிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். இதையடுத்து நாங்குநேரி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு, மூதாட்டியின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர் தங்குவதற்கான இடம், மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்