திருச்சியை அதிரவைத்த சம்பவம்
வாடிப்பட்டி அருகே நகைக்கடை வியாபாரியிடம் 19 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியை சேர்ந்த நகைக்கடை வியாபாரியான நிர்மல் கண்ணன் என்பவர், 19 லட்ச ரூபாய் பணத்தை 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்ததாக, வாடிப்பட்டி போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அதில் நகை வியாபாரம் தொடர்பாக திண்டுக்கல் வந்ததாகவும், அங்கிருந்து 3 பேருடன் காரில் வாடிப்பட்டிக்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாடிப்பட்டி அருகே சென்றபோது 6 பேர் கொண்ட மர்மகும்பல், கத்தியை காட்டி மிரட்டி 19 லட்ச ரூபாய் பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்ததாகவும், நிர்மல் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே, வழிப்பறி கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 59 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் டூவிலரை பறிமுதல் செய்த போலீசார், மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.