தகவல் கொடுத்தால்... - வெளியான முக்கிய அறிவிப்பு

x

அன்பில் சிவன் கோயிலில் இருந்து மாயமான சுந்தர சோழன் காலத்து செப்பு தகடு குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பழமையான சத்தியவாஹீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. மாமன்னர் சுந்தரசோழனால் வழங்கப்பட்ட பழமையான செப்பு தகடு ஒன்று இந்த கோவிலில் இருந்துள்ளது. இந்த செப்பு தகடு அன்பில் தகடு எனவும் கூறப்படுகிறது. 1957இல் மைசூரில் இருந்து தொல்லியல்துறை குழுவினர் செப்பு தகடை நேரில் பார்வையிட்டு படிமம் எடுத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு இந்தத் தகடு இந்த கோவிலில் இல்லை. திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2023இல் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செப்பு தகடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்பு தகடு குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்