சிறைக்குள் வைத்து அத்துமீறல்... கோர்ட்டில் கதறிய திருநங்கை... அதிர வைத்த விவகாரம் - டிஜிபி அதிரடி உத்தரவு

x

சிறையில் திருநங்கைக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சிறைத்துறை டி.ஐ.ஜி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருட்டு வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை ஒருவரிடம், சிறைக் காவலர் மாரீஸ்வரன் என்பவர், பாலியல் ரீதியில் அத்து மீறி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, இலவச சட்டப் பணிகள் ஆணையத்தில் திருநங்கை புகார் அளித்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், சிறைக் காவலர் மாரீஸ்வரன் ஆகியோரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் அதிரடியாக உத்தரவிட்டதோடு, துறை ரீதியிலான விசாரணைக்கும் ஆணையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்