பெல் நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
பெல் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பொதுத்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சுமார் இரண்டு ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூபாய் 15 ஆயிரம் வழங்குவதுபோல தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் மனு அளித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து தொழிற்சங்கத்தினரும் அறிவித்துள்ளனர். இதனால் பெல் நிறுவனத்தில் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story