திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறவிருந்த சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்பு தரிசனம் நடைபெற இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், பொது தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story