தசரா திருவிழா - களைகட்டிய வேடப்பொருள்கள் விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்களால் திசையன்விளையில் வேடப்பொருட்கள் விற்பனை களை கட்டத் தொடங்கியுள்ளது. சாமிகளுக்கான கிரீடம், சூலாயுதம், ஜடாமுடிகள், காளி வேடங்களுக்கான கைகள், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற முகங்கள், ஆடைகள் , பேய் வேடங்களுக்கான மண்டை ஓடுகள், ஆகியன அதிகம் விற்பனையாகின்றன. வேடப்பொருள்கள் விலை கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
Next Story