கவுன்சிலர் முன்... போராடிய பெண்ணை... தலைமுடியை இழுத்து போட்டு அடித்த கொடூரம்... ஷாக் வீடியோ

x

தூத்துக்குடி லயன்ஸ் தெருவை சேர்ந்த ஜெர்மனி மற்றும் பிரிண்டால் ஆகியோருக்கு இடையே வீடு யாருக்கு சொந்தம் என்ற சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. பிரச்சினைக்குரிய அந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக திமுக பெண் கவுன்சிலர் ரெக்ஸ்லின் மூலம் குழி தோண்டப்பட்டது. கவுன்சிலர் முன்பு அந்த குழிக்குள் இறங்கிய ஜெர்மனி, முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்குவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த எதிர்தரப்பை சேர்ந்த பிரிண்டால் என்பவர் கவுன்சிலர் முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை தலை முடியை பிடித்து இழுத்தும், தண்ணீரை ஊற்றியும் தாக்கினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்