பெண் கவுன்சிலருக்கு பகீர் மிரட்டல்?.."போலீசுக்கும் அழுத்தம்"- குமுறும் கணவர்

x

பெண் கவுன்சிலருக்கு பகீர் மிரட்டல்?.."போலீசுக்கும் அழுத்தம்"- குமுறும் கணவர் - பிரச்சினை தீவிரமானதும் களமிறங்கிய அமைச்சர்

தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, தூத்துக்குடி திமுக மாநகராட்சி பெண் கவுன்சிலர். கணவருடன் சென்று எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி 40-வது வார்டு திமுக மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் ரீக்டா. இவர் தனது கணவர் ஆர்த‌ர் மச்சாதுவுடன் அளித்துள்ள புகாரில், 40-வது வார்டு whatsapp குரூப்பில்,திமுக வட்ட செயலாளர் டென்சிங் அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, காவல் நிலையம் முதல், ஏடிஎஸ்பி அலுவலகம் வரை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி டென்சிங்கின் தம்பி கெய்சன் உள்ளிட்டோர், கொலை மிரட்டல் விடுவதாகவும், காவல்துறை தரப்பில் எப்ஐஆர் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புகார் அளித்தால் எடுக்க‌க்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்