லாரியையே அசைத்து பார்த்த வெள்ளம்.. சென்னையே பரவாயில்ல என சொல்ல வைக்கும் கோரதாண்டவ காட்சிகள்
காட்சிகள் : கழுகு பார்வையில் வாகனங்கள் மூழ்கி கிடக்கும் காட்சிகள் மற்றும் கருப்பு மில்லின் வெளித்தோற்ற காட்சிகள் பள்ளிக்கூடம் மூழ்கி இருக்கும் காட்சிகள் பேட்டி உள்ளிட்ட காட்சிகள் உள்ளது
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யுவர் அணி பஞ்சாயத்து பகுதியான ஏ வி கே சி நகர் காமராஜர் நகர் முருகன் நகர், சோட்டையன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பருப்பு குடோன்களில் இருந்த பல கோடி மதிப்பிலான பருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் வேதனை மேலும் அப்பகுதியில் உள்ள சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பெரிதும் தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர் மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வந்த வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட கார்கள் லாரிகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது.