தென்னக வெள்ளம்.. ஆளுநர் RN ரவி கிளப்பிய புயல்.. நோஸ்கட் செய்த மாநில அரசு
வெள் ளம் பாதித்த தென்மாவட்டங்களில், தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும், மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், மாநில அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால், மீட்பு பணியில் தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
Next Story