தூத்துக்குடியில் இருவர் வெட்டிக்கொலை - பெரும் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர், ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் இவர் இரவில் கடையில் தூங்கியுள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரை வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் சாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளத்துரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதுடன், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இரட்டைக்கொலை தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.