அடையாளம் தெரியாத ஆண் சடலம்-அதே போல் அடுத்த சம்பவம்.. விசாரணையில் திடுக்.. தூத்துக்குடியில் பயங்கரம்

x

அடையாளம் தெரியாத ஆண் சடலம்-அதே போல் அடுத்த சம்பவம்.. விசாரணையில் திடுக்.. தூத்துக்குடியில் பயங்கரம்

ஒட்டப்பிடாரம் அருகே கொலை செய்தவரை கைது செய்த போலீசார், கொலையானவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த ஜூன் 12ம் தேதி ஒட்டப்பிடாரத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் சாலையில், மேல பாண்டியாபுரம், ரயில்வே கேட் அருகே முட்புதரில் வெட்டு காயங்களுடன் அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்துள்ளது.

அதேபோல, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பாறைக்குட்டம் பகுதியிலும் இதே பாணியில், மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவர் தலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்குப் போராடி வந்திருக்கிறார். பிறகு இவரை மீட்ட போலீசார் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ச்சியாக, இந்த 2 சம்பவங்களிலும் ஒரே மாதிரியாக தாக்குதல் நடத்தி இருப்பதாக சந்தேகமடைந்த போலீசார், குற்றவாளி யார்? என மேற்கொண்ட விசாரணையில் கேசவன் என்பவர் தான் குற்றவாளி எனத் தெரிய வந்திருக்கிறது.

விசாரணையில், சம்பவத்தன்று கேசவன் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு, லிப்ட் தராத ஆத்திரத்தில் கேசவன் மீது கல்லை எடுத்து வீசியுள்ளார். இதனால், கோபமடைந்த கேசவன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து, லிப்ட் கேட்ட அடையாளம் தெரியாத நபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.

இதேபோல, மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவரை தலையில் அரிவாளால் வெட்டியதும் இதே கேசவன் தான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கேசவன் போலீசில் கூறியுள்ளார். இதனிடையே, கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியாமல் மணியாச்சி போலீசார் திணறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்