தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Thoothukudi

x

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து, அறிக்கையை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. இதற்கு எதிராக தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார், ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த‌து. மேலும், மனுவுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உள்ளிட்டோருக்கு உச்சநீமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்