"10 ஆண்டா வீட்ல கரண்ட் இல்ல..பத்து வர விளக்குல தான் படிக்கிறேன்"..கண்ணீர் மல்க கெஞ்சி கேட்கும் மாணவி - நெஞ்சை நொறுக்கும் சோகம்

x

10 ஆண்டுகளாக தன் வீட்டில் மின்சாரம் இல்லாமலேயே 10ம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி, அதிகாரிகள் மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணபேரி கிராமத்தைச் சேர்ந்த தங்க செல்வம் - சுப்புலட்சுமி தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர்... இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பானுமதி என்ற பெண் பிள்ளை உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, நத்தத்தில் வீடு கட்டி குடியேறியுள்ளனர். 10 வருடங்களாக பட்டா கேட்டு மனு கொடுத்து வந்த நிலையில் பட்டா வழங்காததால் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தரப்படவில்லை... இதனால் தான் பள்ளியில் சேர்ந்தது முதல் வெறும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தை வைத்தே படித்து வந்துள்ளனர் பானுமதியும், அவரது சகோதரரும்... பானுமதி சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில், பொதுத் தேர்வுக்குக் கூட மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படித்துள்ளார். இதனால் தன் வீட்டிற்கு பட்டா வழங்கி மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரக்கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார் பானுமதி...


Next Story

மேலும் செய்திகள்