பள்ளிகளில் அதிகரிக்கும் சாதியம்.பட்டியலின மாணவனை வெட்டிய 10 பேர் -தூத்துக்குடியை மிரளவிட்ட சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் பட்டியலின மாணவர் ஒருவருக்கும், மற்றொரு மாணவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பட்டியலின மாணவர் உட்பட இருவரை, ட்யூசன் செல்லும் வழியில் வைத்து ஒரு கும்பல் கத்தியால் வெட்டியுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுதகார் உட்பட 10 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக இளம் சிராற் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
Next Story