திடீரென சாலையின் உள்ளே சென்ற பைக்...அதிர்ச்சி காட்சி
நாசரேத் அருகே, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சார்பில் நாசரேத் - திருச்செந்தூர் மார்க்கத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது, இந்த சாலையில் 2 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் என்பவர் பள்ளத்தில் சிக்கி லேசான காயம் அடைந்தார்.
Next Story