தனியே சிக்கிய அதிகாரி... ரவுண்டு கட்டிய மக்கள்.. பரபரப்பு காட்சி

x

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, சிட்கோ தொழிற்பேட்டை தங்கள் ஊராட்சி பகுதியில் அமைய வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். லிங்கம்பட்டி ஊராட்சியில், 54 ஏக்கரில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான பணி நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்படும் சிட்கோ லிங்கம் பட்டி - குலசேகரபுரம் இரு ஊராட்சிகளுக்கு இடையே வருவதாக கூறப்படுகிறது. சிட்கோ பகுதியில் உரிய அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குலசேகரபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தபோது, லிங்கம்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு அறிவித்த படி சிட்கோ, லிங்கம் பட்டி ஊராட்சியில் தான் தொடர வேண்டும் என்று கூறி அப்பகுதியில் இன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி லிங்கம் பட்டி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். பின்னர், வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 3 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்