குளம் உடைந்து காவு வாங்கப்பட்ட பல உயிர்கள்.. அடுத்து என்ன நடக்குமோ? அச்சத்தில் ஊர் மக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் உடைந்த குளங்கள் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக, சுமார் ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோரம்பள்ளம் குளம், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் உடைந்து, அதனால் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதன் சீரமைப்பு பணிகள் தாமதமாக நடைபெறுவதாக தெரிகிறது. இந்த ஆண்டு மழை காலம் வருவதற்குள் குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story