மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈ.பி.ஸ் நேரில் ஆய்வு..வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணம்

x

தூத்துக ்குடியில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர், பக்கிள் ஓடை ஆகிய பகுதிகளை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்