கண்ணை மறைத்த கனவு... இஸ்டாகிராமில் தீயாய் பரவிய ஆபாச போட்டோஸ்

x

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், பார்ட் டைம் ஜாப் பெற்றுத் தருவதாக கூறி வலை விரித்திருக்கிறார். வேலை தொடர்பாக அந்நபர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, தனது மருமகனின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை பெண் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமதாக அந்நபரின் சதித்திட்டத்தை அறிந்து பணத்தை பெண் திருப்பி கேட்ட நிலையில், அவரின் குடும்பத்தினர் புகைப்படத்தை நபர் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது பெண்ணை நிலை குலைய செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தேசிய சைபர் கிரைம் போலீசில் புகாரளித்த நிலையில், விசாரணையில், மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் பெண்ணிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஸ்ரீதரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அவரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்த நிலையில், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்