வெள்ளத்தால் சிதைந்து போன தூத்துக்குடி..உடனே களத்துக்கு விரைந்த சிவதாஸ் மீனா | Thoothukudi Flood
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் கூடுதல் பம்புகளைக் கொண்டுவந்து நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டார். மறவன்மடம், அந்தோனியார்புரம், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், தாழ்வான பகுதிகளில் நிரந்தரமாக பம்புகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறினார்
Next Story