நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய நபர்.. மர்மகும்பலால் இளைஞருக்கு நடந்த கொடூரம்
முறப்பநாடு அருகே உள்ள பக்கபட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர், சில வருடங்களுக்கு முன்பாக 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு எதிராக சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது அந்த வழக்கை சிறுமியின் தந்தை வாபஸ் பெறுவதாகக் கூறவே, வடிவேல் முருகன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய அவரை, தெய்வ செயல்புரம் பகுதி அருகே, மர்மகும்பல் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்தது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், நெல்லையில் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில், பழிக்குப்ழியாக வடிவேல் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story