பிரசவம் பார்த்த நர்ஸ்கள்.. 10 நாளாக உயிரை கையில் பிடித்திருந்த குழந்தை மரணம்.. ஹாஸ்பிடலில் பரபரப்பு

x

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருச்செந்தூர் ஆலமரத்துவிளையைச் சேர்ந்த வினோத் - சசிகலா தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி சசிகலா அனுமதிக்கப்பட்டார். அன்று பிற்பகல் செவிலியர்கள் பிரசவம் பார்த்த போது பெண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அடுத்த நாளே மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி குழந்தைக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனால் சோகமடைந்த குழந்தையின் தந்தை வினோத் மற்றும் உறவினர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்