தேரை இழுக்க ஆள் இல்லாததால் பக்தர்கள் எடுத்த திடீர் முடிவு

x

நவதிருப்பதி கோவில்களில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் ஆழ்வார் கோவில், சித்திரை தேர்திருவிழா, இன்று நடைபெற்றது.

பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், தெற்கு ரத வீதிக்கு வந்த போது தேருக்கு பின்னால் தடி போடுவதற்கு ஆள் இல்லாததாலும், வடம் பிடித்து இழுக்க ஆள் இல்லாததாலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும், கோவில் நிர்வாகத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பின், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு மீண்டும் தேர் நிலை வந்தது. இதனிடையே, வளைவில் தேர் வரும் போது மேடாக இருந்ததால் கிரேன் மூலமாக நகர்த்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பக்தர்களே தேரை இழுத்து திருத்தேர் நிலைக்கு வந்தடைந்ததாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்