நாய்க்கு தடுப்பூசி போட சென்ற நபர்...திறக்கப்படாத அரசு ஹாஸ்பிடல்..பொறுமையாக வந்த டாக்டர் சொன்ன பதில்.

x

நாய்க்கு தடுப்பூசி போட சென்ற நபர்...திறக்கப்படாத அரசு ஹாஸ்பிடல்..பொறுமையாக வந்த டாக்டர் சொன்ன பதில்..கோபத்தின் உச்சிக்கே சென்ற நபர்... களேபரம் நடக்க பரிதாபமாய் இருந்த குட்டி நாய்

கால்நடை மருத்துவமனை திறக்க காலதாமதம் ஆனதால் கோபம் அடைந்த நபர் தன் நாய்க்காக நடுரோட்டில் அமர்ந்து போராடிய பரபரப்பு சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது...தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த கோபால் தன் வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு காலை ஏழரை மணிக்கு வந்துள்ளார். வழக்கம்போல் 8 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மருத்துவமனை எட்டரை ஆகியும் திறக்கப்படாததால் கோபம் அடைந்த கோபால் சாலையில் தன் நாய்க்குட்டியுடன் அமர்ந்து போராடத் துவங்கினார்... போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்க... 1 மணி நேரம் கழித்து வந்த மருத்துவமனை ஊழியர்... மருத்துவமனையில் மருந்து இல்லாததால் நாய்க்கு தடுப்பூசி போட வெளியில் இருந்து நீங்கள் தான் மருந்து வாங்கி வர வேண்டும் என கோபாலிடம் கூற... கடும் கோபமடைந்த கோபால் கடும் வாக்குவாதம் செய்தார்... இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்