புலிகள் இறக்க இது தான் காரணம்..வெளியான அதிர்ச்சி தகவல் | Nilgiris | Tiger | INDIA

x

நீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்த நிலையில் தேசிய புலிகள் ஆணையம் உதகையில் புலிகள் இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினரிடம் விசாரணை நடத்தியது.

அதில், நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பே அதனுடைய இறப்பிற்குக் காரணமாய் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது... அதாவது, தமிழகத்தில் 2006ல் 76ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022ல் 306ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 51ஆக இருந்த எண்ணிக்கை 114 ஆக கூடியது... நீலகிரியில் பெண் புலிகள் ஒரே பிரசவத்தில் 3 குட்டிகள் வரை பிரசவிக்கும் நிலையில், அதில் 50 சதவீதம் நோய் போன்ற பல காரணங்களால் இறக்க நேரிடும். அடுத்தடுத்த பிரசவங்களில் பிறக்கும் குட்டிகளை வளர்க்க ஆற்றலை சேமிப்பதற்காக தாய்ப் புலியால் குட்டிப் புலிகள் கைவிடப்படுவதால் சிகூரில் இறப்பு நேரிட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இறை தேட தாய்ப்புலி நீண்ட தூரம் செல்கையில் குட்டிகள் தனியே கவனிக்கப் படாமல் போக வாய்ப்புள்ளது... இதனால் சின்ன குன்னூரில் புலிக்குட்டிகள் இறந்திருக்கக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவட்டம், கார்குடியில் புலிகள் இறந்தது உட்பூசல் காரணமாக இருக்கலாம் என்றும், அவலாஞ்சியில் 2 ஆண் புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட இறந்த மாட்டின் இறைச்சியை உணவாக சாப்பிட்டதால் இறந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷம் வைத்த நபர் ஏற்கனவே வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்