"மதுரை ரயில் விபத்து நடந்ததற்கு முக்கிய காரணமே இது தான்.." - ரயில்வே ஏடிஜிபி சொன்ன திகில் தகவல்

x

மதுரையில் தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியை, தெற்கு ரயில்வே ஏடிஜிபி வனிதா ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கான காரணம் டீ போடுவதற்காக எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்ததான் என தெரியவந்துள்ளது என்றார். அவர்கள் சிலிண்டர், விறகு உள்ளிட்டவையும் வைத்திருந்த‌தாக தெரிவித்த ஏடிஜிபி வனிதா, ரயில் நிலையத்திற்கு முன்பே பெட்டி நிறுத்தப்பட்டிருந்த‌தால் தங்களுக்கு தெரியவில்லை என்றார். தனியாக பெட்டி நின்றிருந்த‌தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்