"பாரத நாடு இப்படி தான் உருவானது.." - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில், தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் கலை பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, கோயில்கள் நம் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்து வருவதாக கூறினார். ரிஷிகளாலும், முனிவர்களாலும் பாரத நாடு உருவாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், வெவ்வேறு மதங்கள் இருந்தாலும், பாரத தர்மத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்றார். ஆன்மீகம், மொழி பண்பாட்டில் ஆங்கிலேயர்கள் பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டிய ஆளுநர், சுதந்திரத்திற்குப் பிறகு, சாலை, மருத்துவ வசதிகளுக்கு முனைப்பு காட்டியதாகவும், ஆனால் கலாச்சார மறுமலர்ச்சிக்கு எந்த முன்னெடுப்பும் இல்லை என்றும் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, விரைவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றார்.