"பெற்றோருக்கு இனி கவலை இல்லை.." - ஓட்டுநர் சொன்ன அசத்தல் ஐடியா... வியந்து நின்ற அதிகாரிகள்

x

பள்ளி வாகனத்தில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள சென்சார் கருவியை குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

திருவாரூரில் பள்ளி வாகனத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது நவீன தொழில்நுட்பத்தால் உருவான சென்சார் கருவி..

திருவாரூரில் பள்ளி வாகனங்களை தீவிரமாக ஆய்வு செய்து கொண்டிருந்த போது, வழக்கம் போல் ஒரு தனியார் பள்ளி வாகனத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் இருந்த சென்சார் கருவியை பார்த்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதுகுறித்து விளக்கம் கேட்க.. அதிகாரிகளே வியக்கும் அளவிற்கு ஒரு விளக்கத்தை அளித்தார் அந்த ஓட்டுநர்..

அதாவது இந்த கருவியை வாகனத்தில் பொருத்தியதன் மூலம், குழந்தைகள் வாகனத்தில் ஏறியதுடன் தங்களது அடையாள அட்டையை கருவி முன்பு காண்பிக்க வேண்டும்..

அந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்தவுடன், குழந்தை பத்திரமாக வாகனத்தில் ஏறி விட்டது என்ற குறுஞ்செய்தி பெற்றோர்கள் எண்ணிற்கு சென்றுவிடும்.

அதே போன்று வீட்டிற்கு செல்லும் போதும் குழந்தை பத்திரமாக வாகனத்தை விட்டு இறங்கியதாகவும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள இக்கருவியை அனைத்து பள்ளி வாகனங்களிலும் பொருத்த வேண்டும் என அதிகாரிகளும் எண்ணிய நிலையில், அதுவே பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்