சந்தேகமே வராதபடி வேலை.. ஒவ்வொரு பொருளும் ரூ.18 லட்சம்.. புது வகை மோசடி
செல்போன் டவர்களில் இருக்கும் ஆர்.ஆர்.யூனிட்டை திருடி மோசடி
திருவாரூர் மாவட்டத்தில்... செல்போன் டவர்களில் இருக்கும் விலையுயர்ந்த பொருளான ஆர்.ஆர்.யூனிட் தொடர்ந்து திருடுபோவதாக, போலீசில் அடுத்தடுத்து வந்திருக்கிறது புகார்கள்..
வட பாதிமங்கலம், வலங்கைமான், கண்டியூர், நீடாமங்கலம் என பல காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் குவியவே, தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்...
இதில், சிக்கியவர்கள்தான் இந்த 3 பேர்...
கொரியர் மூலம் Parts-களை டெல்லிக்கு அனுப்பிய டெக்னீசியன்கள்
வேலியே பயிரை மேய்ந்த கதையாய் இந்த மோசடியை அரங்கேற்றி கைவரிசை காட்டியிருக்கின்றனர் மூவரும்...
மூவரில், கணேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும்.... தனியார் செல்போன் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்திருக்கின்றனர்...
இருவருக்கும் வேலையில் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது..
இந்நிலையில், செல்போன் டவர்களை பழுது பார்க்கச் சென்ற இடத்தில் இருவரது கண்ணிலும் பட்டிருக்கிறது டவர்களில் இருந்த ஆர்.ஆர்.யூனிட்..
விலையுயர்ந்த இந்த ஆர்.ஆர்.யூனிட்டை திருடி விற்றால் கணிசமாக பணம் சம்பாதிக்கலாம் என எண்ணி திட்டம் தீட்டிய இருவரும், இந்த மோசடிக்கு கணேஷின் சகோதரரான லோகேஷையும் கூட்டாளியாக சேர்த்திருக்கிறார்கள்..
அடுத்த கட்டமாக, திருடிய ஆர்.ஆர்.யூனிட்டை கொரியர் மூலம் டெல்லிக்கு அனுப்பி விட்டு, அந்த கொரியர் டெல்லி செல்லும் முன்னே இந்த மூவரும் டெல்லி சென்றிருக்கின்றனர்...
கொரியர் வந்து சேர்ந்த உடனே, அதனை அங்கு ஏற்பாடு செய்து வைத்திருந்த நபர்களுக்கு விற்று பணம் சம்பாதித்திருக்கின்றனர்...
மூவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 18 லட்சம் மதிப்புள்ள ஆர்.ஆர்.யூனிட்களை கைப்பற்றி இருக்கின்றனர்...
ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆர்.ஆர்.யூனிட்டுகள் பறிமுதல்
செல்போன் டவரை பழுது பார்க்க செல்வதுபோல் சென்று, டெக்னீசியன்களே அரங்கேற்றி இருக்கும் இந்த நூதன மோசடி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார், வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...