மதிமுக நிர்வாகி மகன் கல்லால் அடித்து கொலை.. சிக்கிய கல்லூரி மாணவன்.. அதிர்ச்சி காரணம்

x

திருத்துறைபூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் லேத் பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறையை கல்லூரி மாணவரான ஸ்ரீராம் என்பவர் நிர்வகித்து வருகிறார். தந்தை உயிரிழந்ததால் பட்டறையை ஸ்ரீராம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பட்டறை அருகே, திருத்துறைப்பூண்டி மருத்துவமனை சாலையை சேர்ந்த மதிமுக நிர்வாகி மோகன் என்பவருக்கு சொந்தமாக நிலம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை சம்பவத்தன்று அளந்தபோது, ஸ்ரீராம் தரப்புக்கும் மோகன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. உடனே, தன் மகன் அருள் பிரகாசத்தை, செல்போன் மூலம் மோகன் சம்பவ இடத்திற்கு வரவழைத்ததை அடுத்து, இரு தரப்புக்கிடையும் கைகலப்பாகி இருக்கிறது. அப்போது, அருள் பிரகாஷை தன் பெரியப்பா மகன் விக்னேஷூடன் சேர்ந்து, ஸ்ரீராம் கல்லால் அடித்து தாக்குதல் தொடுத்துள்ளார். இதில், படுகாயமடைந்த அருள் பிரகாசம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ஸ்ரீராம் மற்றும் விக்னேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்