பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கு பெண் பலி.. - கதறி அழும் உறவினர்கள்.. நெஞ்சை உலுக்கும் காட்சி..

x

திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த செலஸ்டினா என்பவர் அஞ்சலக எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் செலஸ்டினா தனது இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் கமலாலய மேல்கரையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், செலஸ்டினா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு குவிந்த நிலையில், செலஸ்டினா உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனையே காரணம் என குற்றம் சாட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்