கல்வியால் கிடைத்த வெளிச்சம் - மாணவி அசத்தல்

x

கொரடாச்சேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலா, சுதா தம்பதியின் மகளான துர்கா தேவி, அரசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வீட்டில் மின் இணைப்பு வசதியின்றி செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் படித்து வந்துள்ளார். இதன் பின் பொதுத்தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடத்தையும், மாவட்ட அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். இதன் பின்னரே அவர் வீட்டில் மின்சார வசதி இல்லாதது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மாணவியின் வீட்டிற்கு இலவசமாக மின் இணைப்பை அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்