வாக்குவாதம்.. கைகலப்பு.. பரபரப்பு.. போலீசார் குவிப்பு - அதிர்ச்சி காட்சிகள்

x

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட 150 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது... அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... விளமல் பகுதியிலிருந்து காவல்துறையினரின் அனுமதியின்றி பேரணி செல்ல அவர்கள் முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்ததால் தடுப்பு வேலிகளை தூக்கி எரிந்ததில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கை கலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்