ஒரே விபத்து 9 வருடம் இருண்ட வாழ்க்கை - 4 பிள்ளைகளோடு தனி ஒருவராக போராடும் தாய்

x

ஒரே விபத்து 9 வருடம் இருண்ட வாழ்க்கை

வீட்டின் தூணாக நின்றவர் இன்று குழந்தை

3 பெண் குழந்தைகளோடும் போராடும் தாய்

முதுகுத் தண்டுவட பாதிப்பால் வீட்டில் கணவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிய நிலையில்...சாப்பாட்டுக்குக் கூட பணமின்றி தவித்து வருவதாகக் கண்ணீர் விடும் மனைவியின் பரிதாப கதையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

வறுமை வாட்டும் சூழலிலும்...தனது ஆண் குழந்தை மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்பட 4 குழந்தைகளுடன் சேர்த்து 5வது குழந்தையாக கணவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் இந்த பெண் தான் வைஷ்ணவி...

திருவாரூர்...கீழ வைப்பூர்...காமராஜர் நகரைச் சேர்ந்த செல்வகுமார் ஒருகாலத்தில் கூலி வேலை செய்து தன் குடும்பத்தைத் தாங்கி வந்தார்...

ஆனால் 2015ல் வேலை செய்யும் இடத்தில் தகரக் கொட்டகை சரிந்து முதுகில் விழுந்ததில் செல்வகுமாருக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது...

இருந்த நகைகளை விற்று லட்ச ரூபாய் செலவழித்து கணவரைக் காப்பாற்றியுள்ளார் வைஷ்ணவி...

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் செல்வகுமாருக்கு இடுப்பிற்கு கீழ் செயல்படாது...

8 வருடங்களாக படுத்த படுக்கையாக வீட்டிலேயே முடங்கி உள்ளார்...

குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது...

வைஷ்ணவி தான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைத் தோளில் தாங்கி வருகிறார்...

அரசு மூலம் மாதம் 3000 ரூபாய் பணம் செல்வகுமாருக்கு வருகின்ற போதும் அதைக் கொண்டு மருத்துவ செலவைக் கூட முழுமையாக கவனிக்க முடியாத சூழல்...

வைஷ்ணவிக்கு வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே வயல் சார்ந்த கூலி வேலை...

மீதமுள்ள நாட்களில் சாப்பாட்டுக்கே சிரமம்...

2 வருடங்களுக்கு முன்பு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் முயற்சியில் வைஷ்ணவி இறங்கியுள்ளார்...

இருப்பினும் கணவரின் மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீட்டைக்கூட முழுமையாக முடிக்க முடியாத சூழல்...

கதவு இல்லை...ஜன்னல் இல்லை...தரைப்பூச்சு இல்லை...சுவர்களும் பூசப்படவில்லை...ஆபத்தான நிலையில் வீட்டில் வாழ்ந்து வரும் அவலம் தான் இது..

குடும்பத்தின் ஒரே ஆதாரம் வைஷ்ணவி மட்டுமே எனும்போது..அரசு கருணை காட்டி இந்த ஆதரவற்ற குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்