கத்தியால் தலையில் குத்தி, கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட பெண் - அதிர்ந்து போன மக்கள்
திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி. இவருக்கு திருமணமான நிலையில், கணவர் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியே வசித்து வந்த பிரபாவதி, கத்தியால் தலையில் குத்தப்பட்டும், கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்த நிலையில், நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் அறிந்து வீட்டின் முன் கூடிய உறவினர்களில், பிரபாவதி தரப்பு உறவினர்களுக்கும், அவரின் கணவர் தரப்பு உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story