சோசியல் மீடியாவில் வந்த விளம்பரம்.. இல்லத்தரசிகள் தான் டார்கெட்.. கலெக்டர் ஆபீசில் குவிந்த பெண்கள்

x

தனியார் நிறுவனத்தில் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டி ஏமாந்தவர்கள், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூரில் ஸ்ரீ அம்பாள் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திய திருப்பூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் சமூக வலைதளங்களிலும், துண்டறிக்கைகள் மூலம் விளம்பரம் செய்தார். இல்லத்தரசிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களை குறி வைத்து குறைந்த முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் வீட்டிலிருந்தபடியே கப் சாம்பிராணி செய்து கொடுக்க வேண்டும் என விளம்பரம் செய்தார். அதற்காக நபர் ஒருவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் டெப்பாசிட் என பெரும் தொகையை வசூல் செய்தார். இந்நிலையில் சாம்பிராணி தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் விநியோகத்தை அவர் திடீரென நிறுத்தி விட்டு, தலைமறைவானார். காவல் துறையில் புகார் அளித்த டெப்பாசிட் செய்து ஏமாந்தவர்கள், பின்னர் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்