தி.மலை மருத்துவக் கல்லூரி முதல்வர் செய்த காரியம்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் கேண்டீனின் மின் இணைப்பை, கல்லூரி முதல்வர் துண்டித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

இங்குள்ள கேண்டீனை தனி நபர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார். இந்த கேண்டீனுக்கு செலுத்த வேண்டிய மின்கட்டணமான 28 ஆயிரத்து 477 ரூபாயையும், கடந்த மாதம் 8-ஆம் தேதி இவர் செலுத்தியுள்ளார். இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட உணவுக்காக, கல்லூரி நிர்வாகம் சார்பாக செலுத்த வேண்டிய சுமார் ஒரு லட்ச ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது. அந்த பணத்தை, கல்லூரி முதல்வரான ஹரிஹரனிடம், கேண்டீன் ஒப்பந்ததாரர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் ஹரிஹரன், கேண்டீனின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த செயலால் மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் கேண்டீனில் பணியாற்றுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்