``என் புஜ்ஜிமாவயே அப்படி பண்ணுவியா?'' - காதலியின் கணவரை பிடித்து ஓரினச்சேர்க்கை காதலி செய்த காரியம்

x

``என் புஜ்ஜிமாவயே அப்படி பண்ணுவியா?'' - காதலியின் கணவரை பிடித்து ஓரினச்சேர்க்கை காதலி செய்த காரியம்

திருமணத்திற்கு முன்பு ஓரினச்சேர்க்கையில் இருந்த பெண்ணின் கணவரை, ஆண் நண்பர்களின் உதவியுடன் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போளூர் அடுத்த சேத்துப்பட்டு வந்தவாசி சாலையிலுள்ள, பருதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் சென்னையில் கார் புரோக்கராக தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவில் காரில் வந்தபோது, அவரை வழிமறித்த 3 பேர் கத்திமுனையில் தாக்கியுள்ளனர். மேலும், இவரது காரையும் கடத்தி சென்றனர்.. இது குறித்த சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசாரின் விசாரணையில், திருமணத்திற்கு முன்பே சாவித்திரி, தன்னுடன் சென்னையில் பியூட்டி பார்லரில் வேலைப்பார்த்த சினேகா என்ற பெண்ணுடன் ஓரினச்சேர்ச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. பிறகு, தனது கணவர் கொடுமை செய்வதாக சினேகாவிடம் கூறிய நிலையில், அவர் தனது 3 ஆண் நண்பர்களின் உதவியோடு கத்திமுனையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.. கடத்தப்பட்ட காரையும், கடத்த பயன்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும், கைப்பற்றிய போலீசார் ஏழுமலையின் மனைவி சாவித்ரி, சினேகா, சஞ்சய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை வலைவீசித் தேடிவருகின்றனர்... இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்