திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தொடங்கிய உண்டியல் எண்ணும் பணி
கார்த்திகை தீபத்தை ஒட்டி, தமிழ்நாடு மட்டுமன்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முதல் நாளில், 3 கோடியே 12 லட்சத்து 61 ஆயிரத்து 880 ரூபாய் எண்ணி முடிக்கப்பட்டது. இதுதவிர பக்தர்கள் செலுத்திய 340 கிராம் தங்கம், ஆயிரத்து 895 கிலோ கிராம் வெள்ளியும் கணக்கிடப்பட்டது.
Next Story