திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. பக்தர்கள் கவனத்திற்கு.. இதை மட்டும் செய்ய கூடாது

x

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு கோட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 700 பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சண்முகசுந்தரம், கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் இயக்குவதற்கு அனுமதி இல்லை என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்